Entertainment
விஜய் சேதுபதி பாராட்டிய உதயநிதி படம்
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த படம் தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்தின் மூலம்தான் விஜய் சேதுபதி அறிமுகமானார்.

சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதி ஆஸ்தான நடிகராகவும் விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி ஆஸ்தான இயக்குனராகவும் அறியப்பட்டார்கள்.
இப்போது சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம் கண்ணே கலைமானே. இப்படத்தின் டீசரை சமீபத்தில் விஜய் சேதுபதி தனது டுவிட்டரில் வெளியிட்டார்.
காதலையும் பெண்மையையும் அழகாக இயக்குனர் சீனு ராமசாமி காண்பித்துள்ளார். படம் வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
