தாய் 8 அடி பாஞ்சா குட்டி 16 அடி பாயாதா? விடுதலை 2வில் களம் இறங்கும் பிரபல நடிகரின் வாரிசு!

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் எடுத்த ஆறு படங்களுமே மக்கள் மத்தியிலும் சரி திரை பிரபலங்கள் மத்தியிலும் சரி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எடுத்த அத்தனை படங்களுமே மாபெரும் வெற்றி அடைந்த படங்களாகும்.

நடிகர் தனுஷை வைத்து மட்டுமே நான்கு படங்களை இயக்கிய வெற்றிமாறன், இந்த நான்கு படங்களின் மூலம் தனுஷும் வெற்றி மாறனும் ஒரு வெற்றி கூட்டணி என்ற ஒரு பெயரை பெற்றிருக்கிறார்கள். மீண்டும் அந்தக் கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் விடுதலை. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களுக்கு இடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவுக்கு துன்பங்களை நேர்கொள்கிறார்கள்? போலீசாரால் எந்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்? என்பதை விளக்குவதாக அமைந்த படம் தான் விடுதலை.

இந்தப் படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சூரியும் விஜய் சேதுபதியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருப்பதாக இந்த படத்தில் தெரியும்.

முதலில் கமலுக்கு விரோதியே இந்த நடிகர்தானாம்.. செட்டில் அந்த நடிகரின் பெயரை சொல்லி கடுப்பேத்திய பாலசந்தர்!

அந்த அளவுக்கு சூரியின் நடிப்பு இந்தப் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நகைச்சுவை நடிகராகவே பார்த்து வந்த நமக்கு சூரியின் இந்த வித்தியாசமான கதாபாத்திரம் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் அந்த மீதமுள்ள காட்சிகள் சிறுமலை காட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம். 20 சதவீதமே காட்சிகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் அந்த காட்டில் அனைவரும் இருந்து மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்களாம்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவர் ஏற்கனவே சிந்துபாத் போன்ற ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். விடுதலை இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து வெற்றிமாறன் அவரை பயன்படுத்தி இருக்கிறாராம்.

தளபதி 68 படத்தில் கண்டிப்பாக இவருக்கு வாய்ப்பு இல்லை.. சென்டிமென்டாக வெங்கட் பிரபு எடுக்கும் முடிவு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews