தமிழ் சினிமாவில் “பருத்திவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கார்த்தி. அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்சமயம் கைவசம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன. விருமன் படம் ரிலீசுக்கு காத்திருக்க , சர்தார் படபடப்பில் உள்ளது.
இந்நிலைகள் கார்த்தியின் மற்றொரு படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி உள்ளன. “குக்கூ ” இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ரஜினி, விஜய், கமல், அல்லு அர்ஜுன், ஷாருக்கான் உள்ளிட்டவர்களுக்கு வில்லனாக கமிட் ஆகியுள்ள விஜய் சேதுபதி இந்த படத்திலும் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என பட குழு முடிவு செய்தது.
அதற்காக விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டபோது, தனக்கு போதுமான கால்ஷீட் இல்லை என கூறியுள்ளார். மேலும் இந்த படம் நடிக்க 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளம் கட்டுப்படியாகது என தயாரிப்பு நிறுவனம் யோசித்ததால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மட்டுமா கதாநாயகி? வைரல் பதிவு!
தற்போழுது விஜய் சேதுபதி 35 கோடி சம்பளத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பளத்திற்காக நல்ல படங்களின் வாய்ப்பை விஜய் சேதுபதி இழப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.