ராஜா ராணி ,தெறி, மெர்சல் மற்றும் பிகில் அடுத்தடுத்து படங்களில் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லி, இந்த படங்களும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார்.
தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் அட்லி, ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்திற்கு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தில் அட்லியின் ராசியான நடிகை நயன்தாராவை ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகம் செய்த்துள்ளார்.
இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா ,யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜவான் படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இந்த படத்தின் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது உறுதியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது ராணா அவர்கள் தான்.
ஆனால் சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் படத்தில் நடிக்க முடியாததாக அவரே கூறியுள்ளார், அதனால் சரியான வில்லனாக தேடும் முயற்சியில் விஜய்சேதுபதி பொருத்தமாக அமைந்துள்ளார்.
ரஜினியுடன் பேட்ட ,விஜய்யுடன் மாஸ்டர் ,கமலுடன் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விஜய் 67 படத்தின் வில்லன் இவரா? லோகேஷின் புது முயற்சியா இது..