தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் சந்தானம் என்ற மிரட்டல் வில்லனாக தோன்றி மாஸாக நடித்திருப்பார். அதை தொடர்ந்து ஹீரோவாக நடித்து வெளியான மாமனிதன் படம் பல பிரபலங்களால் பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோ ரேஞ்சில் உள்ள இவர், தனது பாணியை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் , பேட்ட , விக்ரம் படத்தை வில்லனாக நடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடிக்க யுள்ளார்.
குறிப்பாக ஹிந்தியில் ஷாரூக்கானுடன் ஜவான் படத்தில் , கமலுடன் இந்தியன் 2 படத்தில் அடுத்ததாக புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வில்லனாக இவர் நடிப்பில் வரும் படங்கள் ஹிட் அடித்து மக்கள் மனதில் நீங்கா இடமும் பெறுகிறது.
அடுத்த புது முயற்சியாக பிரபல தயாரிப்பு நிறுவனம் வெப் சீரிஸில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதற்காக 35 கோடி வரை சம்பளம் கொடுத்து அவரை கமிட் செய்ததாகவும் தகவல் வந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் விரைவில் இணையும் தளபதி! ப்ரொஃபைல் ரெடியா?
சினிமாவை தொடர்ந்து வெப் சீரிஸிலும் தனது வெற்றி பயணத்தை தொடர விஜய்சேதுபதி ஆரமித்து விட்டார் என ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், வில்லனாக நடித்து இன்னும் பலவெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.