Connect with us

த்ரிஷாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். விஜய்சேதுபதி

Entertainment

த்ரிஷாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். விஜய்சேதுபதி

 efb69dd83c32cecf750f64d4e5df1fbc

விஜய்சேதுபதி நடிக்கும் ’96’ என்ற படத்தில் முதல்முறையாக த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பையும் அவர் நேரந்தவறாமல் படபிடிப்பிடிப்புக்கு அவர் வருவதையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் த்ரிஷா குறித்து விஜய்சேதுபதி கூறியபோது, ‘திரிஷா நடிப்பை மிகவும் நேசிக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது இல்லை. முதல் ஆளாக ஒப்பனையுடன் கேமரா முன்பு நிற்பார். இந்த தொழில் பக்தி தான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ என்று பாராட்டி உள்ளார்

789ca93667be15a975cc7448eb41a96fவிஜய்சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கும் ’96’ படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவும், கோவிந்தராஜ் படத்தொகுப்பும் செய்கின்றனர். இந்த படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top