அடுத்தடுத்த வாரங்களில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படங்கள்!

a98fc4c88ff7dc197afb265bb180cfbc

செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 17 ஆகிய அடுத்தடுத்து இரு வாரங்களில் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி எட்டே நாட்களில் அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி விஜய் சேதுபதி நடித்த ’அனபெல்லா சேதுபதி’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் நாயகி டாப்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி ’அனபெல்லா சேதுபதி திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி, துக்ளக் தர்பார் மற்றும் மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.