Connect with us

வில்லனாக நடிக்க 80 கோடி வாங்கிய விஜய் சேதுபதி! எந்த படத்தில் தெரியுமா?

vijay sethupathi6 1568361358 1611056189

பொழுதுபோக்கு

வில்லனாக நடிக்க 80 கோடி வாங்கிய விஜய் சேதுபதி! எந்த படத்தில் தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் இப்போது அவரது கேரியரில் ஒரு டாப் இடத்தில் இருக்கிறார், ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரைத் தங்கள் திட்டங்களுக்குக் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறார்கள். அவர் தற்போது ஹீரோ மற்றும் வில்லனாக சம எண்ணிக்கையிலான படங்களை தன தன் கைவசம் கொண்டுள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது தேதிகள் நிரப்பப்பட்டுள்ளன. சமீபகாலமாக விஜய் சேதுபதி தொடர்ந்து வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார்,‘விக்ரம் வேதா’ , ‘பேட்ட’ ரஜினிகாந்த் படத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் அதை தெலுங்கில் ‘உப்பனா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஷாரூக்கானுடன் ஜவான் படத்திலும் இந்தியன் 2 படத்திலும் வில்லனாக நடிகையுள்ளார்.

pushpa 2 vijay sethupathi

அடுத்த்தாகக சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் வில்லனாக அவருக்கு 35 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்க 30 கோடி ரூபாயை விஜய் சேதுபதி சம்பளமாக வாங்கியுள்ளார். இதுமட்டுமின்றி தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்திலும், விஜய் சேதுபதியை வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் இதோ!

Vijay Sethupathi 1 1

இப்படத்தில் வில்லாக நடிக்க 25 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார். இந்த மூன்று படங்களும், கடந்த ஜூலை மாதம் தான் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது. அதனால் ஒரே மாதத்தில் மொத்தமாக 80 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளார் விஜய் சேதுபதி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top