விஜய் சேதுபதி தற்போழுது வில்லனாக நடித்த ‘விக்ரம்’ படம் மற்றும் கதாநாயகனாக நடித்த ‘மாமனிதன்’ படம் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து ஷாரூக்கானுடன் ஜவான் படத்திலும் இந்தியன் 2 படத்திலும் புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிகையுள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 19(1)(a) படத்தின் ரிலீஸ் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
அதை ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி எழுத்தாளராக நடித்திருக்கும் இந்த படத்தில், நித்யா மேனன் டெலிபோன் பூத் மற்றும் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவராக நடித்துள்ளார்.இந்த படத்தின் டீசர் நேற்று, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இரண்டாவது முறை அம்மாவாகும் ஐஸ்வர்யா ராய் ? வெளியான வீடியோவால் ரசிகர்கள் குழப்பம்…!