தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்ட நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன், அவர் உச்சத்திற்குச் சென்றார் மற்றும் இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். மிரட்டல் வில்லன் முதல் காதல் தோல்வி வரை அனைத்தையும் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும், சமீபகாலமாக அவரது எதிர் வேடங்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ‘விக்ரம்’ படம் மற்றும் கதாநாயகனாக நடித்த ‘மாமனிதன்’ படம் சமீபத்தில் வெளியானது.
‘விக்ரம்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் ‘மாமனிதன்’ படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து ஷாரூக்கானுடன் ஜவான் படத்திலும் இந்தியன் 2 படத்திலும் புஷ்பா 2 படத்திலும் வில்லனாக நடிகையுள்ளார்.
இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 19(1)(a) படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனை அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் இந்து இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.