Connect with us

அதர்வாவுடன் இணைந்த விஜய் சேதுபதி பட ஹீரோயின்!

Entertainment

அதர்வாவுடன் இணைந்த விஜய் சேதுபதி பட ஹீரோயின்!

99bfc57c16254d241d1c0887d54f05ff-1

டார்லிங், எனக்கு இன்னோரு பேர் இருக்கு, 100 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சாம் ஆண்டன். இவர் அதர்வாவை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்துக்கு வரும் மார்ச் 8-ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கருப்பன் திரைப்படத்தில் நடித்த  தன்யா ரவிச்சந்திரன் நடிக்கவிருக்கிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

இவர்களுடன் 90களின் பிரபல நடிகரான அருண் பாண்டியன் நடிக்கிறார். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற மாறா திரைப்படத்தை தயாரித்த புரோமோத் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதேநேரம், அதர்வா அனுப்பமா பரமேஸ்வரனுடன் இணைந்து தள்ளிப் போகாதே, பிரியா பவானிஷங்கருடன் குருதி ஆட்டம்,  ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த, பெயரிடப்படாத இன்னொரு படத்தில் வாணி போஜனுடன் ஒரு படம் என நடித்து வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top