முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் ஒப்பந்தமான பிரபல நடிகர்….!

பொதுவாக ஒரு படம் உருவான பின்னர் தான் படத்தின் காட்சிகள் அல்லது பாடல் வரிகள் சர்ச்சைக்குரியதாக உள்ளது என கூறி அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் படம் உருவாகும் முன்பே கிளம்பிய எதிர்ப்பு காரணமாக அப்படம் அப்படியே கைவிடப்பட்டது.

இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை சாய்த்து பெரிய சாதனை படைத்துள்ளார். அதை மையப்படுத்தி 800 என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அதில், நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதன்படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபக்சேவிற்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இருந்த முத்தையா பயோபிக்கில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என கண்டனங்கள் வலுத்ததால் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து விஜய்சேதுபதியை தவிர தனது பயோபிக்கிற்கு யாருமே சரியாக பொருந்த மாட்டார்கள் என நினைத்த முத்தையா முரளிதரன் தனது பயோபிக் படத்தை உருவாக்கும் முயற்சியை கைவிட்டதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த படம் உருவாக உள்ளதாம்.

danny boyle

அதன்படி விஜய்சேதுபதிக்கு பதிலாக முத்தையா முரளிதரன் பயோபிக்கில் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் தேவ் படேல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment