ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றின் ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ரஜினிகாந்த் நடித்த மிகச் சிறந்த படங்களில் ஒன்று ’ஆறிலிருந்து அறுபது வரை’ இந்த திரைப்படம் அவரது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்திய திரைப்படம் என்றும் அவரது மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது
ரஜினியே பல பேட்டிகளில் தனக்கு மிகவும் திருப்தி அளித்த திரைப்படம் ஆறிலிருந்து அறுபது வரை தான் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ரீமேக் விரைவில் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தில் ரஜினிகாந்த் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே விஜய் சேதுபதி வயதான கேரக்டரில் ஒருசில படங்கள் நடித்துள்ளதால் இந்த படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது