விஜய்சேதுபதி பேசாம வில்லனாகவே நடிக்க போயிரலாம்.. ‘டிஎஸ்பி’ விமர்சனம்!

விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனால் அவர் நடித்த அவர் ஹீரோவாக நடித்த மாமனிதன் உள்பட மற்ற படங்கள் தோல்வியை சந்தித்து வருகின்றன.

dspஅந்தவகையில் ‘டிஎஸ்பி’ திரைப்படமும் ஒரு தோல்விப் படமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு வேலையில் எப்படியாவது சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அவரது நண்பரால் ஒரு பிரச்சனை வருகிறது. விஜய்சேதுபதிக்கு வில்லனுக்கு உள்ள இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டிருக்கும் போது திடீரென விஜய் சேதுபதிக்கு காவல்துறை வேலை தேடி வருகிறது. இதனை அடுத்து அந்த பிரச்சினையை அவர் வளர்த்துக் கொண்டாரா? அல்லது சுமூகமாக முடித்துக் கொண்டாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

விஜய் சேதுபதி ஏற்கனவே போலீஸ் கேரக்டரில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருக்கு இந்த கேரக்டர் சுத்தமாக பொருந்தவில்லை. காமெடி ஆக்சன் என மாறி மாறி காட்டினாலும் படம் முழுவதுமே காமெடியாகத்தான் இருக்கிறது.

நாயகி அனுகீர்த்தி நடித்திருக்கிறார் என்பதைவிட அவ்வப்போது வந்து போகிறார் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் வில்லன் பிரபாகரன் உள்பட எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை என்பது மிகப்பெரிய மைனஸ்.

சீமராஜா, எம்ஜிஆர் மகன் என தொடர் தோல்வியை கொடுத்து வரும் இயக்குனர் பொன்ராம்க்கு கொண்டாரா? படமும் ஒரு தோல்விப் படமாகவே இருக்கும் என்று தெரிகிறது. படம் ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் இந்தப் படம் தேறாது என்று முடிவு செய்து விடுகின்றனர். அதற்கேற்றார் போல் தான் கடைசி வரை காட்சிகள் மாறி மாறி வருகிறது.

மொத்தத்தில் விஜய்சேதுபதி இனிமேல் வில்லனாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் திருப்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...