வித்தியாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்திய விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ…..

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். ஒரு நடிகர் என்ற ஆணவம் கெத்து என எதுவுமே இல்லாமல் மிகவும் எளிமையாக இருப்பதாலோ என்னவோ பலருக்கும் விஜய் சேதுபதியை பிடித்துவிட்டது. பலரது பேவரைட் நடிகர்கள் பட்டியலில் விஜய் சேதுபதி பெயர் நிச்சயம் இருக்கும்.

ஆனால் சமீபகாலமாகவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களை மட்டுமே வழங்கி வருகிறார். இருப்பினும் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளது. அந்த வகையில் தற்போது தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக், வெப் தொடர் போன்றவை கைவசம் உள்ளன.

இதுதவிர இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும் பல புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வரிசையில்
இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் சேதுபதி-அனுஷ்கா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி திடீரென போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். நாடக கலைஞர் வேடமிட்டு அவர் நடத்தியுள்ள இந்த போட்டோ ஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. திடீரென நாடக கலைஞர் வேடத்தில் விஜய் சேதுபதி போட்டோ ஷூட் நடத்த காரணம் என்ன இது ஏதேனும் புதிய படத்திற்கான கெட்டப்பா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் விஜய் சேதுபதியும் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர் நாடக கலைஞர் வேடத்தில் போட்டோ ஷூட் நடத்தி இருப்பது தான் ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment