Connect with us

சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட விஜய் சேதுபதி… அதிலும் இந்த படம் வேற லெவல் ஹிட்டாச்சே…!

விஜய் சேதுபதி

பொழுதுபோக்கு

சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட விஜய் சேதுபதி… அதிலும் இந்த படம் வேற லெவல் ஹிட்டாச்சே…!

சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட விஜய் சேதுபதி… அதிலும் இந்த படம் வேற லெவல் ஹிட்டாச்சே…!

ஆரம்ப காலத்தில் இருந்தே மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து தனது எதார்த்தமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. பார்க்க பக்கத்து வீட்டு பையன் போன்று இருப்பதால் நடிக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

தொடர்ந்து பல வெற்றி படங்களை வழங்கி வந்த விஜய் சேதுபதிக்கு கொஞ்ச நாட்களாக கெட்டகாலம் போல. அதனால் அடுத்தடுத்து அவரின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இரண்டு படங்களை விஜய் சேதுபதி தவறவிட்டுள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

kaithi

இதை விஜய் சேதுபதியே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்தில் இருந்தே விஜய் சேதுபதியை தான் அவரின் படத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருந்தாராம். அந்த வகையில் கைதி படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மனதில் வைத்துதான் லோகேஷ் எழுதியுள்ளார்.

ஆனால் சில காரணங்களால் விஜய் சேதுபதியால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதனையடுத்தே கார்த்தி அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இருப்பினும் கார்த்தி கைதி படத்தில் நடிப்பதற்கு முன்பாக விஜய் சேதுபதிக்கு போன் செய்து கேட்டாராம்.

இதே போல விஜய் சேதுபதியின் நண்பர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் படத்திலும் முதலில் விஜய் சேதுபதியை தான் நடிக்க வைக்க படக்குழு கேட்டுள்ளது. ஆனால் அதிலும் சில காரணங்களால் விஜய் சேதுபதியால் நடிக்க முடியவில்லையாம் .

இதுகுறித்து அந்த படத்தில் நடிக்க முடியாதது எனக்கு வருத்தம்தான். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படக்குழு என்னை அனுகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என விஜய் சேதுபதி கூறியுள்ளார். இப்போது கூறி என்ன பிரயோஜனம் விஜேஸ் இந்த மாதிரி தரமான படங்களை விட்டுட்டு அனபெல் மாதிரியான கதைகளை ஏன் தேர்வு செஞ்சீங்கனு ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top