தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம், அவரது மகள் குடும்பத்தினர் ஒரு கோடி, தல அஜித் 25 லட்சம், சூர்யா குடும்பத்தினர் ஒரு கோடி என பல பிரபலங்கள் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமும் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்து உள்ளார் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதனையடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பல திரையுலக பிரபலங்கள் முதல்வரை சந்தித்து நிதியுதவி செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் மட்டும் இன்னும் எந்தவித நிதியுதவி குறித்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது