பட்டாக்கத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டிய விஜய்சேதுபதி: சர்ச்சையில் சிக்குவாரா?

eb7ee5a9451177670c230161a0a318c1

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருவதை அடுத்து அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது 

கடந்த சில வருடங்களாக பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடுவதை உள்ளூர் ரவுடிகள் பெருமையாக நினைத்துக் கொண்டனர். அவ்வாறு பொது இடங்களில் பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி கைது செய்யப்பட்ட ரவுடிகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 

eb408f2dff4365d80b0c138b1460b849-1-2

இந்த நிலையில் தமிழ் பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவரை சுற்றி அவரது நண்பர்கள் சிரித்த வண்ணம் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இருப்பினும் விஜய் சேதுபதி பொது இடத்தில் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக்கை வெட்டவில்லை என்றும் தனது வீட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதில் தவறு இல்லை என்றும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்

இருப்பினும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவது சர்ச்சைக்குரிய வகையில் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இது தேவைதானா என்ற அறிவுரையையும் விஜய் சேதுபதிக்கு அவரது உண்மையான ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்/ இந்த சர்ச்சையை விஜய் சேதுபதி தவிர்த்திருக்கலாம் என்று பெரும்பாலான திரையுலக பிரபலங்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் விஜய்சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.