
பொழுதுபோக்கு
தொடர்ந்து வில்லனாகும் விஜய் சேதுபதி! அடுத்தது யார் படத்தில் தெரியுமா?
தமிழில் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி.அதை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான் , சேதுபதி , 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் செல்வன் என ரசிகர்களால் பாராட்டபடுபவர் .
இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பலத் திறமைகளை கொண்டுள்ளவர்.மேலும் ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லனாக நடிப்பதில் இவர் கைதேர்ந்தவர்.
முதலில் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படம் சுந்தர பாண்டியன்,இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தது மக்களின் கவனத்தை ஈர்த்தது.அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக டஃப் கொடுக்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார்.
அந்த வரிசையில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கில் ’உப்பெனா’ படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, கால்ஷீட் பிரச்சினையால் ’புஷ்பா’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாம் .
இந்தியில் ’மும்பைக்கர்’ எனும் படத்தில் நடித்து வருவதாகவும், அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் படங்களில் நடித்து பிசியாக உள்ளார்.இந்நிலையில், பிரபல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மீண்டும் ஏகன் கெட்டப்பில் நயன்தாரா! O2 திரைப்படத்தின் புது லுக்..
இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.இதில் ஹீரோவுக்கு இணையான வில்லன் வேடத்தில் நடிக்க, விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேசி வருகின்றனர்.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
