
பொழுதுபோக்கு
தெலுங்கு படத்தில் மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி ? ‘புஷ்பா 2’ அப்டேட்!
இயக்குநர் சுகுமார் எழுதி இயக்கி, தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா.இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .நடிகை ராஷ்மிகா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் தரமாக நடித்துள்ளார். கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மைத்திரி மூவி மேக்கர்சும் முட்டம் செட்டி மீடியா நிறுவனமும் இதை தயாரித்த இப்படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
புஷ்பா முதல் நாளில் ரூ.45 கோடி வசூலித்தது. படம் வெளியாகி அந்த வகையில் 50 நாட்களில் உலகளவில் 365 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை புஷ்பா படம் படைத்தது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இருவருக்கிடையிலான மோதல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முதல் பாகத்திற்கு ஹிந்தியில் நல்ல வசூல் கிடைத்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் அதை விட பன்மடங்கு வரவேற்பு வேண்டுமென்றால் ஹிந்தி நடிகரும் வேண்டும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம்.
அதனால் நடிகர் விஜய் சேதுபதியிடம் நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான ‘உப்பெனா’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி தற்போழுது 4க்கு மேற்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார்.
‘வாரிசு’ தயாரிப்பாளருக்கு கிடைத்த வாரிசு! டைட்டில் உண்மையானது!
