Connect with us

விஜய்சேதுபதி, அஞ்சலி இணையும் இரண்டாவது படம்

Entertainment

விஜய்சேதுபதி, அஞ்சலி இணையும் இரண்டாவது படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்

இந்த படத்தை ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ளார். குடும்பம் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்த படத்தை கே புரடொக்சன்ஸ் ராஜராஜன் தயாரிக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இந்த படத்த்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என இயக்குனர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top