சிம்ரன், ஜோதிகாவை ‘இந்த’ வார்த்தை சொல்லி அவமதித்தாரா விஜய்?

சிம்ரன் மற்றும் ஜோதிகாவை நடிகர் விஜய் அவமதித்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் ஷாம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

simran jyothika

தான் விஜய்யுடன் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்ததாகவும், அதன் பின்னர் தான் ஹீரோவாக மாறிய உடன் ’என்ன முதல் படத்திலேயே இரண்டு குதிரைகள் உடன் நடித்து கலக்கிவிட்டாயே’ என்று விஜய் சொன்னதாகவும், ஷாம் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அவர் 12பி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த சிம்ரன் மற்றும் ஜோதிகாவை தான் விஜய் குதிரைகள் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை குதிரைகள் என கூறி விஜய் அவமதித்து விட்டதாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு நாட்கள் முன்னதாக அளித்த பேட்டியில் ’அஜித்தின் துணிவு திரைப்படமும் வரட்டும் அந்த படமும் நன்றாக ஓடி வெற்றி பெறட்டும் நம்ம படமும் வெற்றி பெறட்டும்’ என விஜய் கூறியதாக ஷாம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.