ட்விட்டரில் வாத்தி ரெய்டு! அனைத்திலும் நம்பர் ஒன்; அஜித்தை பின்னுக்கு தள்ளிய விஜய்!!

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ட்விட்டரில் அதிகம் தேடப்பட்ட ஹேர் ஸ்டாக் வெளியாகும். அந்த படி இந்த ஆண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேர் ஸ்டாகில் கொரோனா முதலிடத்தை பெற்றுள்ளது.

மாஸ்டர்

நேற்றைய தினம் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மட்டும்தான் சினிமா துறை சார்பில் டாப் 10 பட்டியலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.அந்த டாப் 10 பட்டியலில் மாஸ்டர் திரைப்படத்திற்கு 8வது இடம் கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது ட்விட்டரில்  அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதிலும் நடிகர் விஜயின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதன்படி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தினை நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படம் பிடித்துள்ளது. இதனால் டுவிட்டரில் நடிகர் விஜயின் ஆதிக்கமே காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment