Connect with us

விஜய் நடித்த போக்கிரி படத்துக்கு 15 வயது – ரசிகர்கள் கொண்டாட்டம்

pokkiri vijay

Entertainment

விஜய் நடித்த போக்கிரி படத்துக்கு 15 வயது – ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்த போக்கிரி படத்துக்கு 15 வயது – ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியானது . ஜனவரி 12 ம் தேதி 2007ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது.

பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். மகேஷ்பாபு நடித்து பூரி ஜெகன்னாத் இயக்கிய தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இது என்றாலும் தமிழுக்கேற்ற வகையில் இயக்குனர் பிரபுதேவா சிறப்பாக இயக்கி இருந்தார்.

ஓப்பனிங் பாடலில் விஜய்யுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி இருப்பார். டோலு டோலுதான் அடிக்கிறா என்ற பாடல் போக்கிரி பொங்கல், வசந்த முல்லை போலே வந்து உள்ளிட்ட பாடல்கள் இப்படத்தில் வரவேற்பு பெற்றன.

பிரகாஷ்ராஜ் வில்லன் நடிப்பில் இப்படத்தில் மிரட்டி இருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆவதால் விஜய் ரசிகர்கள் இப்படத்தை டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top