வீடியோ கேம் விளையாடும் மகன்… செல்லமாய் தொந்தரவு செய்யும் விஜய்…

9dcf3bb8625284b483ef7929b8f74fbf

தமிழ் சினிமாவின் தளபதியாய் உயர்ந்து நிற்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கும் நடனத்திற்கும் பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். 
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் விஜய் பற்றி எந்த செய்தி வெளியானாலும் அது சீக்கிரமே வைரலாவது வழக்கம். அவர்  பொதுவாகவே சமூக வலைதளங்களில் பதிவிடுவது அரிது. அப்படி அவர் ஒரே ஒரு வார்த்தை பதிவிட்டாலும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனது மகன் ஜேசன் சஞ்சய் உடன் அவர் இயல்பாக விளையாடி சிரித்துக் கொண்டிருக்கும் அந்த புகைப்படம் பார்ப்பவர்களை கவர்ந்துள்ளது.

 
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.