படப்பிடிப்பின் போது ரசிகர்களை சந்தித்த விஜய்! டிரெண்டாகி வரும் வீடியோ!

தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார், இந்த படம் குறித்து ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் பலர் அடங்கிய துணை நடிகர்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். மெகா நட்சத்திர நடிகர் எஸ்.ஜே சூர்யாவும் ஒரு அங்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Varisu Sarathkumar Update

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இருமொழி படமாக இருக்கும். இது பான்-இந்தியா திட்டமாக இருக்கும் மற்றும் விஜய் தெலுங்கில் முதல் முறையாக படமாக்குகிறார்.இந்நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது .

எண்ணூர் பகுதியில் வாரிசு படப்பிடிப்பு இறுதி ஷெட்யூலில் முக்கிய நடிகர்கள் நடிக்கும் முக்கிய காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர்.இதை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடியுள்ளனர். அதிக கூட்டத்தினால் கலவரங்கள் நடந்ததாகவும் தகவல் பரவியது.

அஜித் குமாரின் பைக் பயணத்தின் இணைந்த மஞ்சு வாரியர்! வெளியிட்ட புதிய படங்கள்!

இந்நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு சென்றார் விஜய். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment