தளபதி விஜய் இன்று தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க இருக்கும் நிலையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மணக்க மணக்க மட்டன் பிரியாணி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் விரைவில் தீவிர அரசியலில் இறங்க இருப்பதாகவும் அதற்கு முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் நிர்வாகிகள் பலர் வெற்றி பெற்றனர் என்பதும் அதனை அடுத்து விஜய் நேரடியாக அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்கனவே முதல் கட்டமாக ஒருசில மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய் இன்று மீண்டும் ஒரு சில மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் விஜய் உடனான சந்திப்பு முடிந்ததும் மணக்க மணக்க பிரியாணி பரிமாறப்படும் என்றும் அதற்காக தற்போது மட்டன் பிரியாணி தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய சந்திப்பின் போது விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை விஜய் கூறுவார் என்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.