விஜய் நினைத்தால் இப்படி இருக்கலாம்… ஆனால் அவர் செய்ய மாட்டார்…. விஜய் குறித்து பேசிய எஸ்.ஜே.சூர்யா….!

தமிழ் சினிமாவில் தளபதி விஜயை பிடிக்காத நடிகர்களே இல்லை. பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் விஜய் குறித்து பல பேட்டிகளில் புகழ்ந்து பேசியுள்ளனர். விஜய் சிறந்த நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர் என்று பல செயல்களில் நிரூபித்துள்ளார். அவரின் நற்பண்பு காரணமாகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

sj suryah 0

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நிகழ்ச்சி ஒன்றில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதன்படி
சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. சுமார் 53 நாடுகள் பங்கேற்கும் இவ்விழாவில் பங்கேற்றபோது தான் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா நடிகர் விஜய்யை பாராட்டி பேசியுள்ளார்.

விஜய் குறித்து அவர் கூறியதாவது, “விஜய் சார் பற்றி நான் என்ன சொல்வது. தமிழகமே சொல்கிறதே. இப்போது தமிழகம் மட்டுமல்ல, தெலுங்கு மக்களும் சொல்லப்போகிறார்கள். விஜய் சார் ரொம்ப சின்சியரான நடிகர். அவர் நினைத்தால் படப்பிடிப்பு தளத்திற்கு 11 மணிக்குக்கூட வரலாம். யாரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்.

ஆனால், அவரை நான் ரொம்ப அதிகமாக பார்த்து மிரளும் ஒரு விஷயமென்றால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் 6.55 மணிக்கே மேக்கப்புடன் ரெடியாக இருப்பார். அவர் சின்சியாரிட்டியிலும் பன்ச்சுவாலிட்டியிலும் ரொம்ப ரொம்ப சூப்பர்” என பாராட்டியுள்ளார். தற்போது விஜய் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ள இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் குஷி படத்தில் நடித்துள்ளார். இப்படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம். தற்போது வரை இப்படத்தை ரசிகர்கள் பேவரைட் படமாக பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் குறித்து அவர் கூறியுள்ள இந்த தகவல்கள் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment