ஸ்டைலா நடந்து வரும் விஜய்! தொடர்ந்து வெளியாகும் வாரிசு படத்தின் காட்சிகள்!

விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டைட்டில் மற்றும் முதல் 3 போஸ்டர்கள் சமீபத்தில் விஜய் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது.

வாரிசு திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது .படத்தில் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ,அதைத்தொடர்ந்து காமெடி காட்சிகள்,சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

vaarisu 1

இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அடுத்த ஆண்டு பொங்க ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில் தான் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு விஜய் ராஜேந்திரன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மொபைல் ஆப் டிசைனராக நடிக்கயுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றால் படத்தின் கதைக்களம் , சூட்டிங் ,நடிகர்களின் கதாப்பாத்திரம் போன்ற விஷயங்கள் மிக பாதுகாப்பாகவும் மறைவாக அமையும்.

ஆனால் விஜய்யின் வாரிசு பட சூட்டிங் தொடங்கிய நாளில் இருந்து பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றது, முதலில் படத்தில் விஜய்யுடன் நடிகை குஸ்பு இருப்பது போன்ற காட்சிகள் வெளியானது , அடுத்ததாக விஜய் நடனமாடும் காட்சிகள் வெளியானது.

maxresdefault 55

அதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடத்தையும் மாற்றினார்கள். இதனால் செலவும் அதிகமானதுடன், நேரமும் வீண் ஆனது. இந்நிலையில் வாரிசு படக்குழுவுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் மீண்டும் ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.தற்போது அந்த விடியோயோ வெளியாகி வாரிசு குழுவை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் மாடியில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

விஜய்-அஜித் போல மாஸ் காட்டும் தி லெஜெண்ட் ! 2,500 திரையரங்குகளில் பிரமாண்ட ரிலீஸ்…

கோலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரின் படங்களுக்கே இப்படி ஒரு நிலைமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவே இல்லையா என கமெசெய்தும் வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment