சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்

18e748469883d383afd587381f3ea4df

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் படத்தில் வில்லனாக நடித்த பிரபல ஹீரோ மற்றும் இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் அயலான் திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் ’டான்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது 

81ab9e07926aaf0a73c89b04593a19d1-1

லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனனே நடிப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் மெர்சல் உள்ளிட்ட ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும், பல படங்களில் நாயகனாகவும் இயக்குனராகவும் திரையுலகில் வலம் வந்த எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இதுகுறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நாயகி மற்றும் வில்லன் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.