Connect with us

விஜய் 66ல் 3வது லுக்கில் விஜய் இருப்பது என்ன பைக் தெரியுமா? விலை இவ்ளோதானா!

vijay 3 look

பொழுதுபோக்கு

விஜய் 66ல் 3வது லுக்கில் விஜய் இருப்பது என்ன பைக் தெரியுமா? விலை இவ்ளோதானா!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vijay 66

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி 66 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னாள் மாலை 6.01 மணிக்கு வெளியானது . படத்திற்கு தமிழில் வாரிசு என்று தலைப்பு வைத்து ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதை தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படக்குழு இன்று இரண்டாவது லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளது.மேலும் ஒரு அதிரடியாக படக்குழு மாலை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது விஜய் 66 படத்தில் 3 வது லுக் தான்.இதில் விஜய் பைக்கில் அமர்ந்து இருப்பது போல போஸ்டர் அமைந்துள்ளது.

விஜய் கம்பீரமாக பைக்கில் அமர்ந்து The Boss Returns என்ற கெத்தான வார்த்தைகளுடன் உள்ள அந்த போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. விஜய் அமர்ந்திருப்பது என்ன பைக்? விலை எவ்வளவு என்ற கேள்வியும் வந்துள்ளது.

விஜய் அமர்ந்திருப்பது யெஸ்டி அட்வென்ஜர் (Yezdi Adventure) பைக். யெஸ்டி 1980 மற்றும் 1990களில் இந்திய அளவில் மிகவும் பிரபலமாக இருந்த பைக் பிராண்டுகளில் ஒன்று.

yezdi roadster scrambler adventure first look walkaround1 1642062652

நீண்ட இடைவேளைக்கு பிறகு யெஸ்டி பிராண்டின் கீழ் 3 புதிய பைக்குகள் இந்தியாவில் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அந்த 3 யெஸ்டி பைக்குகளில் ஒன்றுதான் யெஸ்டி அட்வென்ஜர். இந்த பைக்கில், 334 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 29.7 பிஹெச்பி பவர் மற்றும் 29.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. யெஸ்டி பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 பைக்குகளிலேயே இதுதான் அதிக சக்தி வாய்ந்தது இந்த 3 பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

yezdi 3 164239661316x9 1

மேலும் தளபதி விஜய்யின் வாரிசு போஸ்டரில் உள்ள யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் ஆரம்ப விலை 2.10 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 2.19 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

தளபதி விஜய்க்கு கதை சொன்ன RJ பாலாஜி! யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி..

பொதுவாக அஜீத் தனது திரைப்படங்களில் பயன்படுத்தும் பைக்குகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால் விஜய்யின் வாரிசு போஸ்டரில் இடம்பெற்றுள்ள யெஸ்டி அட்வென்ஜர் பைக்கின் விலை மிகவும் குறைவுதான்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top