த்ரிஷா பார்த்திபனை தொடர்ந்து கோல்டன் விசா பெற்ற விஜய் பட நடிகை….!

சமீபகாலமாக ஐக்கிய அரபு அமீரகம் தென்னிந்திய நடிகர்களை தேடி தேடி கோல்டன் விசா வழங்கி வருகிறது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், துல்கர் சல்மான், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் கோல்டன் விசா பெற்றனர். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் நடிகர்களில் முதல் முறையாக நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது.

அமலா பால்

முன்னதாக தமிழ் நடிகைகளில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவிற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. தற்போது அந்த வரிசையில் நடிகை அமலா பாலும் இணைந்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே நடித்து வந்த அமலா பால் தற்போது ஹிந்தியிலும் களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் தனக்கு ஐக்கிய அமீரக அரசின் கோல்டன் விசா கிடைத்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அவர், “தங்கத்தை தேடி ஓட வேண்டும் என்பார்கள்.. நானும் ஓடினேன். எனக்கு கோல்டன் விசா கிடைத்து விட்டது. இந்த விசா எனக்கு கிடைக்க காரணமானவர்களுக்கு என் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான அமலா பால் தற்போது மலையாளத்தில் பிருத்விராஜ் உடன் இணைந்து ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுதவிர தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள அதோ அந்த பறவை போல மற்றும் கடாவர் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும் ஹிந்தியில் புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். சமீபகாலமாக அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தனது முழு கவனத்தையும் திருப்பியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment