விஜய் விலையில்லா உணவகம்:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசம்!

விஜய் விலையில்லா உணவகம்

ஆரம்ப காலகட்டத்தில் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக மாறியுள்ளார் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகத்தில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.  தான் நடிக்கும் படத்தின் சாதனையை அடுத்த படத்திலேயே முறியடிக்கும் திறமை மிக்கவர்.

 விஜய் மக்கள் இயக்கம்

இவர் சினிமா துறை மட்டுமின்றி பொதுப் பணியில் மும்முரமாக காணப்படுவார். அவரைப் போன்று அவரது ரசிகர்களும் அவ்வாறே உள்ளனர்.  சில மாதங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா உணவகம் திருவள்ளூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது.

இதனால் ஏழை எளியவர்களுக்கு விலையில்லாமல் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜய் விலையில்லா உணவகம் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவை சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் நடிகர் விஜய்யை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print