உள்ளாட்சி தேர்தலில் விஜய்: அதிரடி முடிவு

5a2bb31d85a85eadacace2bb41b5ff69-1

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்வு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இருக்கும் நிலையில் தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 

நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 20 மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்ததாகவும் போட்டியிடுபவர்கள் தங்களுடைய விருப்பத்தை தலைமையிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து அடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.