விஜய் பட ஹீரோயினை தட்டி தூக்கிய சந்தானம்.. அட இவங்க நிலைமை இப்படி ஆகிப்போச்சே

தமிழ் சினிமாவில் சந்தானம் ஒரு நகைச்சுவை நடிகராக நடித்து இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்தும் வருகிறார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சிம்புவால் அறிமுகமான சந்தானம் வல்லவன் திரைப்படத்தின் மூலம் தனது முதல் அறிமுகத்தை பதிவு செய்தார்.

அந்த படத்தில் இருந்து பெரிய பெரிய ஹீரோக்களுக்கு நண்பராகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை இந்த தமிழ் சினிமாவில் பெற்றார் சந்தானம்.

ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்து ஒரு பெரிய நடிகராக மாறி வந்தார். கிட்டத்தட்ட கவுண்டமணி வடிவேலு விவேக் இவர்கள் வரிசையில் சந்தானமும் ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்தார்.

திடீரென ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம் சமீப காலமாக ஹீரோவாகவே நடித்து வருகிறார். நடித்தாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆர்யா தயாரிக்கும் டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்கிறார் என அனைவருக்கும் தெரியும்.

அந்தப் படத்தில் சந்தனத்திற்கு ஜோடி யார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. இப்போது அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகின்றது.

அவர் வேறு யாருமில்லை கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் மீனாட்சி சவுத்ரி தான் சந்தானத்திற்கு ஜோடியாக போகிறார் என்று சொல்லப்படுகிறது. இதை கேட்ட ரசிகர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.

விஜய் பட ஹீரோயின் சந்தானத்திற்கு ஜோடியா என ஆச்சரியத்தில் திகைத்து வருகின்றனர். இதற்கு நெட்டிசன்கள் தரப்பிலிருந்து முதலில் கோட் திரைப்படத்தில் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியா இல்லையா என படம் வெளிவந்த பிறகு பார்ப்போம் என கிண்டலாக பதில் கொடுத்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் சந்தானத்தின் இந்த படமும் வெற்றி பெற வேண்டும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews