நேற்று விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியானது.
இப்படத்தை காண லட்ச கணக்கில் ரசிகர்கள் அணைந்து திரையரங்கிலும் கூட்டம் கூட்டமாய் குவிந்தனர்.
அந்த வகையில் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள்அதிகளவில் திரையரங்கு முன்பு நின்றிருந்தனர்.
திரையரங்கம் முன்பு நின்றிருந்த ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலையின் நடுவே திரண்டு நடனமாடினர். இதனால் சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரசிகர்களில் சிலர் மது அருந்தி இருந்ததால், அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்