
பொழுதுபோக்கு
விஜயை போலவே தனுசையும் கலாய்த்த netflix நிறுவனம்!
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் எல்லாமே வெற்றி படமாகத்தான் இருக்கும். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கூட சில கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக 200 கோடிக்கு மேல் குவித்தது. பின்னர் பீஸ்ட் திரைப்படம் ஒரு மாதம் கழித்து சன் நெக்ஸ்ட் மற்றும் netflix OTT தளத்தில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தை பிரமோஷன் செய்வதற்கு மாறாக பீஸ்ட் படத்தை வச்சு கலாய்த்து பீஸ்ட் பாவங்கள், அரபிக் குத்து பரிதாபங்கள் என அடுத்தடுத்த காமெடியான வீடியோவை வெளியிட்டது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் படத்தை வாங்கி புரமோஷன் என்ற பெயரில் படத்தையும் விஜயையும் இப்படி நீங்கள் கலாய்த்து உள்ளீர்கள் எனக் கூறினார்கள்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான THE GRAY MAN திரைப்படம் வெளிவர காது கொண்டிருக்கிறது. இந்த படத்தையும் netflix நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. பீஸ்ட் படத்தை போலவே இந்த படத்தையும் ஒரு ப்ரோமோஷன் என்ற பெயரில் கலாய்த்துள்ளது.
தனுஷின் ஜகமே தந்திரம் படம் netflix ஓடிடி தளத்தில் தான் வெளியானது.ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா என டயலாக் வரும், இதை தற்பொழுது netflix நிறுவனம் தனுஷ் போட்டோவை பதிவிட்டு அதில் THE GRAY MAN பரம்பரையில் தனுஷ் என கூறிப்பிட்டு கலாய்த்துள்ளது.
பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை எதற்காக திரையரங்குகளில் பார்க்க வேண்டும் தெரியுமா?
