லிகர் படத்திற்காக கவலை பட்ட விஜய் தேவரகொண்டா அம்மா ! காரணம் தெரியுமா?

தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம் திரைப்படம் இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.டாக்சி வாலா ,டியர் காம்ரேட் என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போழுது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா விரைவில் லிகர் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.

LIGER 6 1 1

விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

படத்தில் அனன்யா பாண்டே மற்றும் முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் சமீபத்தில் ஒரு நிகழ்வில் தனது தாயார் மாதவி லிகர் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பு பல பூஜைகளை செய்ததாக கூறினார்.

Liger 965

படத்தில் மைக் டைசனுக்கு எதிராக விஜய் தேவரகொண்டா களமிறங்குவதை குறித்து அவரது அம்மா கவலைப்பட்டதாகவும் அதற்காக ‘நிறைய பூஜை செய்ததாகவும் கூறினார்.மேலும் படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர், விஜய்யின் தாயார் அவரிடம் ‘இது மைக் டைசன்! கவனமாக இரு’ என கூறியிருக்கிறார்.

அதனால் பயந்த விஜய் அம்மா லட்சக்கணக்கான முறை எனக்கு போன் செய்து சின்னுவை பார்த்துக் கொள்ளச் சொன்னார். அவர்கள் படப்பிடிப்பைத் தொடங்கியவுடன், அவர்கள் குழந்தை பருவ நண்பர்கள் போல எப்படி ஒன்றாகச் சிரிக்கிறார்கள் என்பதைப் பற்றிய வீடியோக்களை நான் அவர்களுக்கு அனுப்பினேன்.

 

93042320

இந்நிலையில் விஜய்யின் அம்மா நிறைய பூஜைகள் செய்து விபூதி (புனித சாம்பல்) மற்றும் குங்குமம் (மஞ்சள் பொடி) வைத்தார். நான் இப்போது நன்றாக இருக்கிறேன், அவர்களுடைய பூஜைகள் உண்மையில் வேலை செய்தன (சிரிக்கிறார்) என கூறினார் விஜய் தேவரகொண்டா.

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தினால் ரிலீஸ் தேதியை மாற்றிய கார்த்தியின் ‘விருமன்’!

தற்போழுது இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment