
பொழுதுபோக்கு
சர்சையை கிளப்பிய விஜய் தேவர கொண்டா!! எதற்காக தெரியுமா?
விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகந்நாத் கூட்டணியில் பான் இந்தியா படமாக உருவாகி லைகர் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் தேவர கொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
அதே போல் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கும் சூழலில் முக்கிய வேடத்தில் மைக் டைசன் நடித்திருப்பது இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா இப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நிர்வாணமாக கையில் பூங்கொத்து வைத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனைப்பார்த்த அவருடைய ரசிகர்கள் பல கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆளவந்தான், பி.கே போன்ற படங்களில் இது போன்ற போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
A Film that took my everything.
As a performance, Mentally, physically my most challenging role.I give you everything!
Coming Soon#LIGER pic.twitter.com/ljyhK7b1e1— Vijay Deverakonda (@TheDeverakonda) July 2, 2022
