தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்தை தொடர்ந்து சில படங்களிலேயே தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
தற்போழுது விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ள லைகர் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாக உள்ளது.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.
விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
படத்தில் அனன்யா பாண்டே மற்றும் முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்கிறார். சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது,எங்கு தெரியுமா ?
இந்த நிலையில் தற்போழுது இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியுள்ளது, இந்த பாடல் படத்தில் தாய் மற்றும் மகனாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் விஜய் தேவரகொண்டா மீது படமாக்கப்பட்டுள்ளது. துணிச்சலான விடியின் கதாபாத்திரத்தின் மனோபாவத்தை இந்தப் பாடல் சித்தரிக்கிறது.
மாஸாக இருக்கும் இந்த பாடல் இதோ .