Connect with us

சென்னை வந்ததும் இப்படி ஒரு ஆசையா விஜய் தேவரகொண்டாவுக்கு ? ஆசை நிறைவேற வாய்ப்பு வருமா !

vijay deverakonda starrer liger to release on 25 8 2022 photos pictures stills 1

பொழுதுபோக்கு

சென்னை வந்ததும் இப்படி ஒரு ஆசையா விஜய் தேவரகொண்டாவுக்கு ? ஆசை நிறைவேற வாய்ப்பு வருமா !

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் தற்போழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான லிகர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.இந்த லிகர் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார்.பூரி ஜெகநாத் இயக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களின் முன் வெளியாகியுள்ளது.

விஜய் தேவர்கொண்ட குத்துசண்டை வீரராக நடித்துள்ள இந்த படம் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.

images 2022 07 08T163439.492 1

படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாகவும் ரம்யா கிருஷ்ணன் அம்மாவாகவும் நடித்துள்ளார்.முன்னாள் தொழில்முறை குத்துச்சண்டை உலக சாம்பியன் மைக் டைசன் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில், விஜய் ஒரு எம்எம்ஏ போராளியாக நடிக்கிறார்.பான்-இந்தியா படமான லீகரை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர் படக்குழு.

விஜய் தேவரகொண்டா தான் லைகர் படத்திற்காக ஆடையின்றி வெறும் ரோஜா பூங்கொத்தை மட்டும் அந்த இடத்தில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் வாவ் சொல்ல வைத்தது இந்நிலையில் லிகர் படத்தின் விளம்பரத்திற்காக சென்னை வந்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

1255833 ligar aafat song 1

அப்பொழுது இயக்குநர்கள் ரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். நோட்டா படத்தின் ஷூட்டிங்கின்போது கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுகொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என கூறினார்.

இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வரும் நயன் – விக்கி ஜோடி! மாஸான புகைப்படம்!

தமிழில் டப்பிங் செய்து படங்களில் நடித்து வருகிறேன். லோகேஷ் யூனிவர்ஸில் வாய்ப்பு கொடுத்தால் அதில் பயணிக்க நான் தயாராக இருக்கிறேன். அது விரைவில் நடக்கும் என தோன்றுகிறது” என்றார்.லோகேஷ் கனகராஜ் இயக்கிய அத்தனை படங்களுக்கும் தான் தீவிர ஃபேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

637dc9e46124a340916e875651f2398a

அதற்குள் ரசிகர்கள் விக்ரம் படத்தில் விக்ரம் எனும் பெயரில் கமல் வளர்க்கும் பேரனாக விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைத்தால் கலக்கலாக இருக்கும் என தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தமிழ் ரசிகர்கள், ‘தல’, ‘மரண மாஸ்’ என உற்சாகமாக கத்துவது எனக்கு பிடிக்கும்” என விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top