விஜய் முதலமைச்சர், புஸ்ஸி ஆனந்த் அமைச்சர்.. திடீர் போஸ்டரால் பரபரப்பு

விஜய் முதலமைச்சர், புஸ்ஸி ஆனந்த் அமைச்சர் என்று தேனியில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் அவர் ஆட்சியை பிடிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்

விஜய்யும் அவ்வப்போது தனது திரைப்படத்திலும் பேட்டியிலும் சினிமா படவிழாவிலும் அரசியல் குறித்து பேசுவார் என்பது தெரிந்ததே.

vijay cmஇந்நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக அரசு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என்றும் புஸ்ஸி ஆனந்த் தமிழக அமைச்சராகவும் பதவி ஏற்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் இதனால் விஜய்க்கு மேலும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விஜய் தேர்தல் களத்தில் இறங்குவது உறுதி என அவரது வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.