கருப்பு மாஸ்க் போட்டு சிவப்பு காரில் வந்த விஜய்! இவர் இந்த கட்சிக்கு தான் ஆதரவோ?
தமிழகத்தில் யாராலயும் அசைக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் வசூல் சாதனையை புரிந்து கொண்டு வருகிறது.
இதனாலேயே இவரது படம் வெளியாகும்போது சக நடிகர்கள் தங்களது படத்தை வெளியிடுவதற்கு தயங்குவர். அந்த அளவிற்கு நடிகர் விஜய் சாதனை புரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று விஜய் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்காக தனது ஓட்டை பதிவு செய்துள்ளார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வெளியே வந்து, வாக்குச்சாவடிக்கு சைக்கிள் மிதித்துக் கொண்டு ஓட்டு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவியது. அதே சமயத்தில் சைக்கிளின் நிறம் மற்றும் முக கவசம் ஆகியவற்றை பார்த்துக்கொண்டு இவர் இந்த கட்சிக்கு தான் ஆதரவு தருவதாக அரசியல் வட்டாரத்திலும் கிசுகிசுக்கள் பேசப்பட்டது.
இந்த நிலையில் அவை சட்டமன்ற தேர்தல் மட்டுமன்றி நடக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கருப்பு நிற முகத்துடன் சிவப்பு நிற காரில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கட்சிக்கு தான் ஆதரவு என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
