விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: இன்று முதல் தொடக்கம்!

161d72480c78f4fa5b670d842a78152f

தளபதி விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று முதலே ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். சற்றுமுன் முதலே விஜய் பிறந்தநாள் காமன் டிபி போஸ்டர்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து விஜய் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி அவர் நடித்து வரும் ‘தளபதி 65’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் ’டார்கெட்’ என்று கூறப்பட்ட நிலையில் அந்த டைட்டில் உண்மைதானா என்பது இன்னும் நான்கு நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது 

மேலும் விஜய்யின் பிறந்தநாளை அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த விவரங்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விஜய்யின் 66வது படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை இதில் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் விஜய் பிறந்தநாளில் இரட்டை சந்தோஷம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

45b27d6ee92942dbf3d4960d30c9e396-1

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.