ரஜினியுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிக்க விருப்பப்பட்டு வாய்ப்புக் கேட்ட விஜய்… அதற்கு கே. எஸ். ரவிக்குமார் செய்த செயல்…

சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்பதற்கேற்ப சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தெரியாதோர் யாருமில்லை. ரஜினிகாந்த் அவர்கள் இந்திய சினிமா வரலாற்றில் வெற்றிக்கரமானவரும், பிரபலமானவரும் ஆவார்.

1975 ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களை அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை 70 வயதை தாண்டிய போதிலும் ஓய்வு எடுக்காமல் தமிழ் சினிமாவிற்காக அயராது உழைத்து படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகள் முதல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் திரைப்பட துறையில் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே ஆகிய விருதுகளை தன்னகத்தே கொண்டவர்.

ரஜினிகாந்த் அவர்கள் நடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது 1999 ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’. இப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சிவாஜிகணேசன், மணிவண்ணன், நாசர், அப்பாஸ், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று கமலஹாசன் நடித்த ‘இந்தியன்’ பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இப்படத்தை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து அப்பாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடிக்க விருப்பப்பட்டு கே. எஸ். ரவிகுமாரிடம் வாய்ப்புக் கேட்டாராம். ஆனால் அப்போது இருந்த பிஸியில் கே. எஸ். ரவிக்குமார் அதை மறந்துவிட்டாராம் என தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...