நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. தெலுங்கிலும் இந்த படம் டப் செய்யப்பட்டது என்பதும் தெலுங்கு திரையுலகிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில் ’பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 11 மணிக்கு ’பிச்சைக்காரன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரிலீஸ் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது
இந்த அருவியில் சற்று முன்னர் ஏஆர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளார். ஆவேசமாகவும், அட்டகாசமாகவும் உள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை அவரே இயக்கி வருகிறார் என்பதும் அது மட்டுமன்றி அவரே இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ’பிச்சைக்காரன்’ படம் போலவே ’பிச்சைக்காரன் 2’ படமும் விஜய் ஆண்டனிக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Welcome to the Director’s Clan ‘Director’ @vijayantony ???????? Wishing you the very best for #Pichaikkaran2 & #Bichagadu2 ???? Blockbuster 2022 ahead for you! @vijayantonyfilm @mrsvijayantony pic.twitter.com/2AHyYOjceE
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 24, 2021