விஜய் ஆண்டனியின் ‘வள்ளி மயில் ’ டீசர் வெளியானது!!

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையில், சென்னைக்கு வந்தவர் விஜய் ஆண்டனி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்து கொண்டு தனக்கு தெரிந்த சவுண்ட் என்ஜினியரிங் வேலையை செய்தார்.

இசை மீது இருந்த பிரியத்தாலும், ஏற்கனவே இசை அறிவு இருந்ததாலும், இசையமைப்பாளராகும் வாய்ப்பினை விஜய் ஆண்டனி ஏற்படுத்திக் கொண்டார். தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்க்கு அவர் இசை இசையமைத்த ’என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ சூப்பர் ஹிட்டானது.

அதன் பின் ஒன்றிரண்டு சிரியல்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, டிஷ்யூம், சுக்ரன் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். அதன் பின் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தார். நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நான் படத்திற்கு பிறகு சலீம் படமும் விஜய் ஆண்டனிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. சீரியஸ் படங்களாகவே நடித்து வந்த விஜய் ஆண்டனி. இந்தியா பாகிஸ்தான் படத்தின் மூலம், காமெடி டிரை செய்தார். அதுவும் அவருக்கு சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

அதன் பின் வெளிவந்த ’பிச்சைக்காரன்’ விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட படம். தாய் பாசம், அரசியல் என கலந்து கட்டிய கதை விஜய் ஆண்டனிக்கு பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி நல்ல கதை கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பெரும்பாலும் அவருடைய படங்கள் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டுள்ளது. அதில் சில படங்கள் வெற்றி பெற்றுள்ளது. சில படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. விஜய் ஆண்டனி நடித்து விரைவில் வெளிவர உள்ள ’வள்ளி மயில்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடிக் குழு போன்ற மாஸ் படங்களை இயக்கிய சுசீத்திரன் இந்த படத்தை இயக்கி உள்ளார். சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, மனோஜ் கே பாரதிராஜா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். டி.இமான் இசையமைத்திருக்கிறார். இதுவும் அரசியல் பேசக்கூடிய படமாகதான் இருக்கும் என்பது டீசரில் தெளிவாகத் தெரிகிறது. விஜய் ஆண்டனிக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.