விமர்சகர்களுக்கு குட்டு வைத்த விஜய் ஆண்டனி… டிவிட்டரில் பாராட்டிய இயக்குனர் சேரன்…!

முன்பெல்லாம் சேனல்களில் மட்டுமே திரைப்படங்களுக்கு விமர்சனம் அளிக்கப்பட்டு வந்தது. அதுவும் மோசமான விமர்சனமாக இருந்ததில்லை. ஆனால் தற்போது ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல் வைத்து கொண்டு இஷ்டத்திற்கு படங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் எல்லை மீறி மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

விஜய் ஆண்டனி

இந்நிலையில் விமர்சகர்களுக்கு குட்டு வைக்கும் விதமாக நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ரிவியூ கொடுக்கலாம். ஆனா அதை மனித நேயத்தோடு கொடுக்கணும். ஒரு மாணவன் 10 கிளாஸ் பெயில் ஆகிட்டான்னு வைச்சுப்போம். அதை ஊருக்கே கொட்டடிச்சு சொன்னா எப்படி இருக்கும்?

அந்த மாணவன நல்லா படிச்சுருக்கலாமே இனி நல்லா படினு சொல்றதும் ரிவியூதான். நீயெல்லாம் ஏன் படிக்க வர்ற.. வீட்ல படுத்து தூங்கலாமேனு சொல்றதும் ரிவியூதான். அதேமாதிரி ஒருத்தனோட நம்பிக்கையை கொல்றதும் சாவுதான். உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனா கடவுள் நம்பிக்கை இருக்கவண்ட போய், கடவுள் இல்லணு சொல்லாத. அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில வாழ்ந்துக்கிட்டு இருக்கான்.

ஒருத்தனோட நம்பிக்கைய சாவடிக்கறது மூலமா, அவன் மட்டும் சாவறதுல்ல அவனை சார்ந்து இருக்குறவங்களும் சாவுறாங்க. அதனால விமர்சனம் செய்றவங்க கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனம் செய்யணும். நீதியில் தவறும் போது, சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் போது, காசுக்காக நீ என்ன வேணாலும் செய்வியாணு நீங்க விமர்சிக்கலாம்” என கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குனர் சேரன், “Well said விஜய் ஆண்டனி sir.. நீங்கள் சொல்லும் வலிகள் புரிய அவர்கள் காதுகளையும் மனதையும் திறந்து வைத்திருக்க வேண்டும். நேர்மையற்றவர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் மிக நேர்த்தியான பதில். அசைந்தால், வலிகள் புரிந்தால் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வலியும் நியாயமானது தானே. ஒரு படம் எடுத்து அதை வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல போராட்டங்களுக்கு பிறகே அந்த படம் திரைக்கு வருகிறது. இது தெரியாமல் இஷ்டத்துக்கு விமர்சனம் செய்வது மிகவும் தவறு

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment