5வது முறையாக பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதும் விஜய் அஜித் படங்கள் !

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vaarisu 1 1

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து , அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரயுள்ளது.

அதை தொடர்ந்து முன்னணி நடிகரான நடிகர் அஜித் ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மஞ்சுவாரியர் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இணைய உள்ளார்.

படத்தில் வங்கியில் கொள்ளை மையமாக வைத்து படமாக்கப்பட்டுள்ளது, அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள், ஜான் கொக்கன்,அஜய் மற்றும் வீரா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

ajith 978787878787878787878787878787878787878789789 2

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ! யார் தெரியுமா?

முதலில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் தற்போழுது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடியாததால் வெளியிட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர் படக்குழு. தற்ப்பொழுது இந்த இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத தயாராக உள்ளது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தளபதி விஜய் மற்றும் AK அஜித்குமார் ஆகியோர் முறையே வரிசை மற்றும் AK 61 ஆகிய திரைப்படங்களுடன் 2023 பொங்கலுக்கு மோத உள்ளனர்.

முன்னதாக பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் விஜய் மற்றும் அஜித் இடையே நான்கு மோதல்கள் நடந்தன – நண்பர்கள் vs தீனா (2001), திருமலை vs ஆஞ்சநேயா (2003), போக்கிரி vs ஆழ்வார் (2007), மற்றும் ஜில்லா vs வீரம் (2014) என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment