
Entertainment
விஜய் – அஜித் படங்கள் மோதல்! எப்போ தெரியுமா?
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா எனும் உக்ரைன் நாட்டு நடிகை நடித்து வருகிறார்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கயுள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட வெளியீட்டுத் தேதியை தீபாவளிக்கு மாற்றலாமா என யோசித்து வருகின்றனர்.அதனால் ‘பிரின்ஸ்’ படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என தகவல் வந்துள்ளது.
ஆனால் அதே நாள் அஜித் நடிக்கும்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அஜீத் மற்றும் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் AK 61 படத்தின் படப்பிடிப்பு சில நாட்களின் முன் துவங்கியது.வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளது அடுத்தவாரம் புனேவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
படப்பிடிப்பே முழுதாக முடியாத நிலையில் தீபாவளிக்கு இந்த படம் வெளிவர வாய்ப்பில்லை என உறுதியாக நம்பப்படுகிறது. மேலும் படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என தகவல் வந்துள்ளது.
ஆனால் அதே நாள் விஜய் நடிக்கும் படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கு தெலுங்கில் Vaarasudu – வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். தளபதி படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோத தயாராகிய கார்த்தி ,சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி படங்கள்! எப்போ தெரியுமா?
